ரமணனும் இல்லை.. மழையும் இல்லை.. வழக்கத்தைவிட 71 % பருவமழை குறைவு
திங்கள், 28 நவம்பர் 2016 (15:01 IST)
டிசம்பர் 1-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
''தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்துவரும் 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரைப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையை நோக்கி நகரும்போது மழை பெய்யத் தொடங்கும். அதன் காரணமாக, டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நடப்பாண்டில் அக்.1 முதல் இன்று வரை இயல்பை விட 71% மழை குறைவாக பதிவாகியுள்ளது. சராசரியாக 32 செமீ பெய்ய வேண்டிய மழை இந்த ஆண்டு 10 செமீ மழையே பொழிந்தது'' என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.