ஒமிக்ரான் தடுப்புப் பணிகள் - முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

திங்கள், 3 ஜனவரி 2022 (22:27 IST)
ஒமிக்ரான் தடுப்புப் பணிகள் குறித்து முதவல் நாளை  ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இந்தியாவில் இதுவரை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 118 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளளது.

மேலும், சிகிச்சை பெற்ற 100 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தற்போது ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு 18 சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் நாளை  ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,  பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மேற்கொள்ளப் பட வேண்டிய தடுப்புப் பணிகள் குறித்து மருத்துவத்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்