கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 வயதிற்குட்பட்ட 18,849 குழந்தைகளிடம் மேற்கொண்ட சோதனையில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவுவதற்கு முன்பாக மேல் சுவாச பாதை தொற்று 4 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பிற்கு பின்னர் 2 வயது குழந்தைக்கு கூட சுவாச பாதை தொற்று ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேல் சுவாச பாதை தொற்று ஆகியவற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 21.1 சதவீதம் பேர் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். ஒமைக்ரான் வைரஸ் நுரையீரல், உயிரணுக்களில் குறைவான திறமையாகவும் சுவாச பாதைகளில் மிகவும் திறமையாகவும் பிரதிபலிப்பதால் மேல் சுவாசப்பாதை தொற்று கடுமையாக இருக்கலாம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.