ஓலா, உபேர் வருகையால் ஆட்டோ தொழில் பாதிப்பா ? நீதிமன்றம் அதிரடி

வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (20:48 IST)
ஒலா, ஊபர் கால்டாக்ஸி நிறுவனங்கள் குறைந்த விலைக்கு இயக்குவதால் ஆட்டோ தொழில் பாதிப்பு என்றும், சுற்றுலா ஊர்தி என உரிமம் பெற்ற வாகனங்களை கால் டாக்ஸியாக பயன்படுத்துவதாக சிசிடியூ தொழிற்சங்கத்தின் ராஜ்குமார் என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இதுபற்றி நீதிபதிகள் கூறியுள்ளதாவது :
 
வழக்கில் மனுதாரர் மீதான் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்தே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறைந்த கட்டணத்தில் இயங்கும் வாகன நிறுவனங்களை முறைப்படுத்த உத்தரவிடமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
எல்லா தொழிலிலும் போட்டியுள்ளது. குறைந்த கட்டணம் வாங்குவோரை தேடி பயணிகள் வருவர் என்று நீதிபதிகள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்