மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்துக்கு கொடுத்தால்... கடும் எச்சரிக்கை

புதன், 18 ஜனவரி 2023 (21:03 IST)
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்து கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு இயக்குனராகம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் தூக்க மருந்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனை தடுக்க சில்லறை மறந்து விற்பனை நிறுவனங்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து தூக்க மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆளுநர் தெரிவித்துள்ளார்
 
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்கம் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் கடை சீல் வைப்பது உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்கம் மருந்துகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் விற்பனை ரசீதுகளும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்