அதிமுக கூட்டணிக்கு வர கட்சியே இல்லையா? காலியாக இருக்கும் தலைமை அலுவலகம்..!

Siva

ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (10:37 IST)
தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வலுவான கூட்டணி அமைத்து வந்தன. இந்த நிலையில் திமுக ஒரு பக்கம் தனது வலிமையான கூட்டணியை உறுதி செய்த நிலையில், அதிமுக தரப்பு கூட்டணிக்கு கட்சி கிடைக்காமல் திண்டாடி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவுடன் தேமுதிக, பாமக, தமாக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டாலும் ஒரு கட்சியின் பிரதிநிதி கூட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. தலைமை அலுவலகம் காலியாக உள்ளது.

அதே நேரத்தில் பாஜகவுடன் இந்த கட்சிகள் கூட்டணி சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு இஸ்லாமிய அமைப்பு தவிர இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இல்லை என்பது கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போகிற போக்கை பார்த்தால் அதிமுக தனித்து போட்டியிடும் நிலைமைதான் ஏற்படும் என்று கூறப்படுகிறது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்