பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக இரண்டு நாள் தேசிய திட்டக் குழுக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது பாஜகவை தோற்கடித்த எந்த ஒரு தனிக்கட்சியும் இந்தியாவில் இல்லை என்றும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்