இனி அதற்கான கவலை இல்லை. கங்கை புனித நீரை நாடு முழுவதும் தபால் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யகிறது மத்திய அரசு. கங்கை நீர் 500 மில்லி ரூ.35, 200 மில்லி ரூ.25, ரிஷிகேஷ் தண்ணீர் 500 மில்லி ரூ.22, 200 மில்லி ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலை, ஜார்ஜ்டவுன் ஆகிய 2 தபால் நிலையங்களில் இந்த தண்ணீர் விற்பனையாகிறது.
இன்று காலை விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்து விட்டன. இதேபோல் திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் விற்பனைக்காக வந்துள்ளது. கங்கை நீர் கிடைத்ததை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். கங்கைக்கு போக முடியாதவர்கள் தங்களது கனவு நிறைவேறி விட்டதாக சந்தோஷத்துடன் தெரிவித்தனர்.