2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

Senthil Velan

வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (16:57 IST)
2026 சட்டமன்ற தேர்தலில் மைக் சின்னம் இல்லையென்றும், வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி லட்டு விவகாரம் ஒரு பெரிய பிரச்னையே கிடையாது என்றும் சாப்பிட்டவர்கள் எல்லாரும் உயிரோடு தானே இருக்கிறார்கள் என்றும் கூறினார். ஒரு தேசத்தின் மிக பெரிய  பிரச்னை போல கொண்டு போவது சரியில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு இளைஞர்கள் நலன், முன்னேற்றம் என்று பேசுவது ரொம்ப வேடிக்கையாக உள்ளது என்று அவர் கூறினார்.  எங்க அப்பாவை குடிக்க வைத்துவிட்டு அம்மாவுக்கு 1000 ரூபாய் கொடுப்பது போன்ற ஒரு கொடுமை நாட்டில் எங்கேயாவது உண்டா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.


ALSO READ: நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!
 
2026ம் ஆண்டு தேர்தலில் உறுதியாக மைக் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும் வேறு சின்னத்தில் தான் போட்டி என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 5 தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என்றும் திருச்சியை மையப்படுத்தி அந்நகரத்தை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்