தொலைநோக்கு பார்வை இல்ல.. எல்லாம் அவசரகதிதான்! – அரசின் திட்டங்கள் குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்!

திங்கள், 27 நவம்பர் 2023 (12:36 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி வருவது வருத்தமளிப்பதாகவும் தமிழக அரசு அவருக்கு சிறந்த மருத்துவத்தையோ உடல் நலத்தையோ கவனிக்க முடியாவிட்டால் அவர்கள் மத்திய அரசின் உதவியை நாடலாம் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமானது வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் .


 
கோவை ராமநாதபுரத்தில் பாஜக மண்டல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கோவை தெற்கு தொகுதியில் இது பாஜக சார்பில் வைக்கப்பட்ட  மூன்றாவது மண்டல அலுவலகம் எனவும், மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கும் மக்களுக்கும் இடையேயான ஒரு பாலமாக இந்த அலுவலகம் இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அலுவலகம்  இ சேவை மையமாகவும் இருக்கும்.அதேபோல் பெண்கள் சானிட்டரி நாப்கின் எடுத்துக்கொள்ள இயந்திரமும் இங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மக்கள் நம்பிக்கையோடு பாஜகவை பார்ப்பதற்கான நல்ல சூழல் உருவாகி வருவதாக தெரிவித்த வானதி சீனிவாசன், எந்தவிதமான ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தாலும் அடிப்படைத் தகுதியை பூர்த்தி செய்திருந்தால் யாருடைய ஆதரவும் இல்லாமல் அவர்கள் நேரடியாக அரசு திட்டங்கள் பயன்பெற மத்திய அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது அதில் கோடி கணக்கான மக்கள் பயன் பெற்றிருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ”என் மண் என் மக்கள்” யாத்திரைக்கு மக்கள் தரும் மிகப்பெரிய உற்சாகத்தினால் பலவீனமான பகுதிகளில் கூட ஏராளமான மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் எழுச்சி உற்சாகத்தை தந்து கொண்டிருப்பதாகவும் அந்த வகையில் பல்வேறு வகைகளில் பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவதாக தெரிவித்த வானதி சீனிவாசன், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில்  அரசாங்க திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நியமித்து வருவதாகவும் பூத் கமிட்டி அமைக்கும் பணி மிக வேகமாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


 
வழக்கமாக பருவமழை காலத்தில் உள்ளாட்சி  நிர்வாகம் மழை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வரும் .ஆனால் கோவையை பொறுத்த வரை இதுவரை மழைநீர் தேங்கும் இடங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . நீண்ட கால தொலைநோக்குப் பார்வையில் திட்டங்கள் செயல்படுத்தாமல் அவசர கதிகளில் திட்டங்களை செயல்படுத்துவதால் அரசாங்க பணிகள் அனைத்துமே அரைகுறையாக மெத்தனமாக நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர்கள் எல்லாம் தங்கள் மீது எப்போது ரைட் வரும் என்று எதிர்பார்த்து வருவதால் அரசாங்க வேலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை எனத்தெரிவித்த அவர், அரசாங்கத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார்களோ அதை மாற்ற வேண்டிய சூழலில் முதலமைச்சர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் மிக மோசமாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் டெங்கு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் காய்ச்சல் முகாம் நடப்பது மக்களுக்கு தெரிவதில்லை அது பற்றிய தகவல் மக்களுக்கு கிடைப்பதில்லை எனக் குற்றம்சாட்டிய வானதி சீனிவாசன், கொசு அதிகம் காரணமாக காய்ச்சல் வருகிறது உள்ளாட்சி நிர்வாகம் எல்லா பகுதிகளிலும் மழை நீர் தேங்குவதையும் குப்பை தேங்குவதையும் சரி செய்தால் மட்டுமே காய்ச்சல் பாதிப்பை குறைக்க முடியும்  எனவும், கோவையில் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருக்கக்கூடிய நிலையை பார்க்க முடிகிறது அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் மங்கி பாத் நிகழ்ச்சியில் கோவை சேர்ந்த பல்வேறு நபர்கள் இடம் பெறுவது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தருவதாகவும் அவர் தெரிவித்தார்.


 
மேலும் அரசாங்கம் ஒரு முடிவெடுக்கிறது அதன் பிறகு மாநிலத்தின் முதல்வர் இன்னொரு முடிவெடுக்கிறார். பிறகு முன்னாள் எடுத்த முடிவை மாற்றுகிறார்கள் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விவகாரத்தில் தமிழக அரசு யூ டர்ன் அரசாங்கம்  என்பதற்கு ஒரு உதாரணமாக இருப்பதாகவும், தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் சொல்கிறார் மக்களுக்கு பால் கொடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகளிடம் பால் வாங்குவதை ஏன் குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எந்த பதிலும் கிடையாது.குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை எடுத்தால் மாநில தலைவர் மீது தரக்குறைவான விமர்சனத்தை அமைச்சர் வைப்பதாக தெரிவித்த வானதி சீனிவாசன், அமைச்சர் தனிநபர் தாக்குதல் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனவும், குறைகளை களைவதை விட்டுவிட்டு அவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவதை அமைச்சர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவது அரசியல் அநாகரீகம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும்  டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் மட்டுமல்லாது ஆசிரியர் தேர்வு வாரியம் செவிலியர்கள் தேர்வு ஆகியவற்றில் ஒருபுறம் கன்சாலிடேட் பேமெண்ட் எடுக்கிறார்கள் பின்னர் அவர்களை வெளியேற்றுகிறார்கள் கோவையில் தூய்மை பணியாளர்களை வேலைக்கு எடுத்து விட்ட தூய்மை பணியாளர்கள் அவர்கள் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் அந்த குடும்பத்தில் இன்னொருவருக்கு அந்த வேலையை கொடுக்க வேண்டும் அது அரசாங்கத்தின் விதி தற்போது யார் தூய்மை பணியாளர்கள் இறந்தாலும் அந்த இடத்திற்கு ஒப்பந்த பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அனைத்து வேலையாட்களையும் ஒப்பந்த பணியாளர்களை அமர்த்துவதால் அரசாங்க பணியாளர்கள் என்பதில் தூய்மை பணியாளர்கள் இல்லாத நிலை சென்று கொண்டிருப்பதாகவும், ஒருபுறம் ஒப்பந்த பணியாளர்களை எடுத்துக்கொண்டு குறைந்த ஊதியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதை கூட கோவையில் சரியாக கொடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டிய அவர் கோவையில் தூய்மை பணியாளர்களுக்காக தனியாக ஒரு போராட்டம் நடத்துவதற்கு கூட பாஜக திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருப்பது மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது ஒருவேளை சிறைத்துறை அவரை சரியாக கவனிக்கவில்லையா ஒரு அமைச்சரை கூட சிறைச்சாலையில் சரியான உணவு மருத்துவ வசதியோ இல்லாததன் காரணமாகத்தான் அவருக்கு உடல்நிலை மோசமாகி வருவதாக எங்களுக்கு தகவல் வருகிறது, ஒருவேளை அவருக்கு தமிழக அரசு சிறந்த மருத்துவத்தையோ உடல் நலத்தையோ கவனிக்க முடியாவிட்டால் அவர்கள் மத்திய அரசின் உதவி நடலாம் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை வைத்து கூட மருத்துவர்களை அனுப்பி வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கலாம் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்