வேங்கை வயல் விவகாரம்: 600 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை இல்லையா?

Siva

புதன், 28 ஆகஸ்ட் 2024 (16:25 IST)
வேங்கை வயல் விவகாரம் நடந்து 600 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேங்கை வயல் பகுதியில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்து வரும் சிபிசிஐடி 600 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.  அதுமட்டுமின்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வேங்கை வேல் நீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை 330 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 31 பேருக்கு டிஎன்ஏ சோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும். ஐந்து பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பு மனு தாக்கல் செய்து உள்ளது. இது குறித்து வேங்கை வயல் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறிய போது குற்றவாளிகள் யார் என்பதை நாங்கள் ஏற்கனவே சிபிசியிடம் சொல்லிவிட்டோம். இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது சிபிசிஐடி காவல் துறைக்கு தெரியும். ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதம் செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்