அந்தமான் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தகவல்!
சனி, 13 நவம்பர் 2021 (14:01 IST)
கொல்கத்தாவை நெருங்கிவிட்ட அம்பன் புயல்:
அந்தமான் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தகவல்!
அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சற்றுமுன்னர் வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் கன மழை வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது