குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சனி, 13 நவம்பர் 2021 (12:48 IST)
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
வங்ககடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மையம் இன்னும் 12 மணி நேரத்தில் தோன்றும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
இதனிடையே தற்போது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நவம்பர் 15-த்துக்கு பிறகான 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கன்னியாகுமரியில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கன்னியாகுமரிக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்