இதனை அடுத்து இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு கொரோனா உயிருப்பு கூட இல்லை என்றும் தினசரி 100 க்கும் குறைவாகவே பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்