நடைக்கடன் தள்ளுபடிக்காக முறைகேடு - அமைச்சர் வார்னிங்

வியாழன், 23 செப்டம்பர் 2021 (11:00 IST)
தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி. 

 
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதோடு இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்வதால் அரசுக்கு ரூ.6,000 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். முறைகேடுகளில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்