நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரவுபகலாக ஆறு நாட்களாக மழைப் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக மூன்று நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 82 செ.மீட்டரும், அப்பர் பவானியில் 30 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.