இந்திய அணிக்கு மேலும் ஒரு வெற்றி: தொடரை இழந்த மே.இ.தீவுகள் அணி

திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (07:30 IST)
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து முதல் கட்டமாக டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 67 ரன்களும், கேப்டன் விராட் கோலி 28 ரன்களும் தவான் 23 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து 168 என்ற இலக்கை நோக்கிய விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
டக்ளஸ் லீவிஸ் விதியின்படி 15..3 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 120 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 98 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்ததால் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் இந்த வெற்றியை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்