காட்டுப்பகுதியில் உல்லாசம்; கத்தியுடன் துரத்திய நபர்: அதிர வைக்கும் கள்ளக்காதலியின் வாக்குமூலம்!
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (18:16 IST)
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் உதவியாளராக இருந்த பூபதி கண்ணன் கடந்த 28 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கை போலீஸார் கையில் எடுத்து விசாரித்த போது முதலில் சிக்கியவர் அதே அலுவலகத்தில் வேலைபார்த்த டைப்பிஸ்ட் சவுந்தர்யா. முதலில் பிடிகொடுக்காத சவுந்தர்யா பின்னர் தனக்கு பூபதி கண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை வெளியே கூறினார்.
இதன் பின்னர் அவர் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுந்தர்யா திருமணத்திற்கு முன்னர் ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தனது காதலருடன் தொடர்பு தொடர்ந்ததால், அவரது கணவர் விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனால், அவரது கணவரின் அரசு வேலை கருணை அடிப்படையில் இவருக்கு கிடைத்தது. அப்போதுதான் பூபதி கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. ஒரே நேரத்தில் சவுந்தர்யா இருவருடனும் கள்ளக்காதலில் இருந்துள்ளார்.
வழக்கமாக சவுந்தர்யா பூபதி கண்ணனுடன் காரில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது பாதி வழியில் உள்ள காட்டுப்பகுதியில் இருவரும் உடலுறவு கொண்டு இருந்து வந்துள்ளனர்.
இது போன்று ஒரு முறை காட்டுபகுதியில் உல்லாசமாக இருந்த போது, பூபதி கண்ணன் சீறுநீர் கழிக்க சென்று ரத்த காயங்களோடு ஓடி வந்துள்ளார். அப்போது அவரை குத்தி கொலை செய்த நபர் அவரை துரத்திக்கொண்டு ஓடி வந்துள்ளார்.
அந்த நபர் தன்னையும் கத்தியில் குத்துமாறு வற்புறுத்தியதால் தானும் குத்திவிட்டு, அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன். ஆனால், அந்த நபர் யார் என்று எனக்கு தெரியாது என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.