டிஜிபி பதவியில் இருந்து ஓய்வுக்குப் பின் சைலேந்திரபாபுவுக்கு புதிய பதவி?

சனி, 24 ஜூன் 2023 (16:26 IST)
தமிழ்நாடு  காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் ஓய்விற்குப் பின் டிஎன்பிஎஸ்சி தலைவராகப் பதவி வகிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழக காவல்துறையில் இருந்த தலைமை இயக்குனர் திரிபாதி கடந்த ஜூன் 30,ம் 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தில் புதிய தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
 
இவரது பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான  ஆலோசனைக் கூட்டம் ஜூன் 22 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இந்த நிலையில்,  தமிழக டிஜிபியாக பதவி வகித்த  நடராஜ்  ஓய்விற்குப் பின், டிஎன்பிஎஸ்சி தலைவராகப் பதவி வகித்தார்.

அதேபோல்   தமிழக காவல்துறை தலைவராக 2 ஆண்டுகள் பதவியில் உள்ள சைலேந்திரபாபு  ஓய்விற்குப் பின் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்