சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மாற்றம்: புதிய கமிஷனர் நியமனம்

ஞாயிறு, 9 மே 2021 (14:38 IST)
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மாற்றம்: புதிய கமிஷனர் நியமனம்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அனைத்து முக்கிய ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்
 
ஏற்கனவே முதல்வரின் முதல்வரின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பலர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டுள்ளார்
 
இதுவரை சென்னை மாநகராட்சி கமிஷனராக பிரகாஷ் அவர்கள் பதவியில் இருந்தார் என்பதும் அவரது தலைமையில் சென்னை மாநகராட்சியில் கொரோனாவுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் அவர்கள் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய சென்னை மாநகராட்சி கமிஷனராக சுகன்தீப் சிங் பேடி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்