நெல்லையில் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கான்க்ரீட் வீடு.. புதிய வீடு கட்ட நிதி திரட்டும் நெட்டிசன்கள்..!

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (10:58 IST)
நெல்லையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்ட நிலையில் வீடு ஒன்று இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
அந்த வீட்டில் உள்ளவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டு விட்டாலும் அந்த வீட்டில் உள்ள பொருள்கள் மற்றும் வீட்டின் மதிப்பு மிகப்பெரிய நஷ்டமாக அந்த வீட்டின் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
வீடு இடிந்து விழும்போது அவர் கதறி அழுத காட்சியும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த் என்பவர் மீண்டும் அந்த நபருக்கு வீடு கட்டித்தர உதவி செய்ய இருப்பதாகவும் தன்னுடன் இணைந்து உதவி செய்ய யார் வேண்டுமானாலும் முன் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து பலர் முன்வந்துள்ளதால் புதிய வீடு கட்டுவதற்காக நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் நிதி திரட்டப்பட்டவுடன் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளரிடம் அளித்து புதிய வீடு கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்