தேனியில் மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவருக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவரை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர் வீட்டை சோதனையிட முயன்றனர். ஆனால் போலீசிடம் சிக்காமல் அந்த மாணவனின் குடும்பமே தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது