திடீரென வளைந்த ரயில் தண்டவாளம்.. தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் சேவை பாதிப்பு..!

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
கிண்டி ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் தண்டவாளம் வளைந்துள்ளதை அடுத்து அந்த பகுதி வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் திடீரென வளைந்தது ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் தற்போது தீவிரமாக உள்ளனர். 
 
இதன் காரணமாக கிண்டி  வழியாக தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த பகுதியில் இரயில் சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. கிண்டி ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் தண்டவாளம் வளைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்