தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மூலமாக 'நவகிரக சிறப்பு பேருந்து' சேவை வரும் 24ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் இப்பேருந்து இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்து காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், நவகிரக கோயில்கள் அனைத்திற்கும் பயணிகளை அழைத்துச் சென்ற பின், மாலை 6 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும். என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் தெரிவித்துள்ளது,
மேலும் இந்த சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய பயண கட்டணமாக ரூ750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், TNSTC செயலியில் இதற்கு முன்பதிவு செய்யலாம் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.