தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் வழங்கும் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ், அரசுப் பணி, பதவி உயர்வுக்கு உகந்ததல்ல என தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் பரிந்துரை செய்த நிலையில் இதுகுறித்து தீவிர பரிசீலனைக்கு பின்னர் அதை ஏற்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானதல்ல என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.