அங்கன்வாடி மையத்தில் தேசியக் கொடி மற்றும் தேசிய தலைவர்கள்'பழங்கள் பெயர்களில் பிழைகள்- பொதுமக்கள் அதிர்ச்சி!

J.Durai

வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:36 IST)
கரூர் மாவட்டம் ‌குளித்தலை அருகே வைகைநல்லூர் ஊராட்சி கீழக்குட்டப்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (2021-22) ரூபாய் 11.93 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி  மையம் திறப்பு விழா குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம்  புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை  ரிப்பன் வெட்டி,குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 
 
இதேபோல் அய்யர்மலை வைப்பதிலும் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை எம் எல் ஏ திறந்து வைத்தார்.
 
கீழ குட்டப்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை துவக்கி வைத்த கட்டிடத்திற்குள் சுவற்றில் குழந்தைகள் கற்பதற்காக வரையப்பட்டு இருந்த  தேசியக்கொடி, தேசியத் தலைவர்களின் படங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் . தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள் ஆகியவகைகள்  எழுதப்பட்டிருந்தது.
 
இந்த எழுத்துக்களில் பிழைகள்  இருந்ததால் 
கல்வியாளர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மழலைச் செல்வங்கள் கற்றுக் கொள்வதற்காக வரையப்பட்ட வரைபடங்களில் இத்தனை பிழைகளா? 
என்று கேள்வி எழுப்பினர். 
 
ஆனால் திறப்பு விழாவில் கலந்து கொண்ட குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினி ஆகியோர் அதனை கண்டும் காணாதது போல் இருந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்