நாங்குநேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வேறு சமுதாய மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரை மீண்டும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் நாங்குநேரியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி முனியாண்டியின் மகன் சின்னதுரை. பள்ளியில் நன்றாக படித்து வந்த சின்னதுரையை கடந்த 2023ம் ஆண்டு அதே பள்ளியில் படிக்கும் வேறு சமுதாய மாணவர்கள் சின்னதுரை வீட்டிற்கே சென்று வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டியது.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆபத்தான நிலை கடந்து உயிர் பிழைட்தார் சின்னதுரை. அதன்பின்னர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 78 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார் சின்னதுரை,
இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் சின்னதுரை மீது தாக்குதல் நடந்துள்ளது. சின்னதுரைக்கு போன் செய்து பழைய நண்பர்கள் என கூறி சந்திப்பதற்காக ரெட்டியார்ப்பட்டி மலைப்பகுதிக்கு வர சொன்ன 5 பேர் கொண்ட கும்பல், அங்கு வைத்து சின்னதுரையை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் காயம்பட்ட சின்னதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சின்னதுரையை தாக்கிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பபம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K