குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை.. காவல் கண்காணிப்பாளர் சொன்ன முக்கிய தகவல்..!

Mahendran

சனி, 28 செப்டம்பர் 2024 (11:01 IST)
குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை தொடர்பாக வெளியான பல உண்மைகள் தெரிய வந்துள்ளதாக  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தகவல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
குமாரபாளையத்தில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் கடந்த 2021ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மாட்டை திருடச் சென்று போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தங்கள் முகவரியை மாற்றி கொடுத்துவிட்டு வெளியே வந்துள்ளனர். ஆனால் காவல்துறை பதிவேட்டில் அவர்களது புகைப்படம், கை ரேகை பதிவாகியுள்ளது. 
 
கடந்த வாரம் ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் இதே கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்கள் மொத்தம் 60-70 பேர் கொண்ட கும்பலாக செயல்படுகின்றனர்.  திருட்டில் கைதேர்தவர்கள், ஏடிஎம் மெஷின் வெல்டிங் செய்யத் தெரிந்தவர்கள், வாகன ஓட்டுநர் என ஒரு குழுவாக திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள். 
 
முதலில் இடத்தை தேர்வு செய்து, பின்பு திட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளவர்கள்.  இவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கே செல்கிறது? மொத்தம் எத்தனை குழுக்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்? திருடிய பணத்தை செலவழித்துவிட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
ஏ.டி. எம்.மிஷினை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மிஷின், வெல்டிங் ராட், மின்சாதன உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தகவல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்