பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல்" திருவிழா

வியாழன், 12 ஜனவரி 2023 (23:02 IST)
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அனைத்து நகர மற்றும் ஒன்றிய அளவில் "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
 
அதன்படி நேற்று மாலை கரூர் தெற்கு மாநகரம் சார்பில் ராயனூர் பொன் நகர் பஸ் ஸ்டாப் அருகில் 101 மகளிர் பங்கு பெற்ற மாபெரும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது ‌
 
 அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மியூசிக்கல் சேர் போட்டியும், ஆண்களுக்கு பானை உடைத்தல்  போட்டியும் நடைபெற்றது.
 
முன்னதாக நிகழ்ச்சியில் ருத்ரா பரதநாட்டிய குழுவினர் பங்கு பெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.V.V. செந்தில்நாதன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
 
கரூர் தெற்கு மாநகர தலைவர் ரவி அவர்கள் தலைமையில்,  மாவட்டச் செயலாளர் மற்றும் தெற்கு மாநகர பார்வையாளர் சக்திவேல் முருகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு மாநகர பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நம்ம ஒரு மோடி பொங்கல் நிகழ்ச்சியை நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்