சென்ட்ரல் ரயில் நிலையம் எம்ஜிஆர் ரயில் நிலையமாக மாற்றம்: நள்ளிரவு முதல் அமல்

சனி, 6 ஏப்ரல் 2019 (09:10 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தற்போது எம்ஜிஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் முதலமைச்ச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். கடந்த மாதம் சென்னை வந்த மோடி  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று உறுதியளித்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இதையடுத்து நேற்று தமிழக அரசு சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயர் மாற்றப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது.
 
இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்டரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்