விலங்குகளை சுடுவதற்காக, வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி.. விவசாயி காலில் பாய்ந்த குண்டு..!

Siva

புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:53 IST)
நாமக்கல் மாவட்டம் தோட்டமுடையான்பட்டியில், துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி படுகாயம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் தோட்டமுடையான்பட்டியில், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை சுடுவதற்காக, தானாக இயங்கும் வகையில் நாட்டுத்துப்பாக்கியை விவசாயி ஒருவர் வைத்திருந்தார்.

இந்த நாட்டு துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு வெளியேறி, விவசாயியின் காலில் பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த 55 வயதான  விவசாயி சுப்பிரமணி நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து, எருமப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பயிர்களை காப்பதற்காக நாட்டு துப்பாக்கி வைப்பது சட்டப்படி குற்றம் என்று இதனால் விவசாயிகள் இத்தகைய செயலை செய்யக்கூடாது என்றும் இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது மட்டுமின்றி கடும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இதுகுறித்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்