முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒருவரான பேரறிவாளனுக்கு நேற்று 30 நாட்கள் மருத்துவ விடுமுறை கிடைத்தது. அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் 30 நாட்கள் விடுமுறை கேட்டதாகவும் ஆனால் அந்த விடுமுறை கோரிக்கையை சிறை அதிகாரியை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து இப்போது நளினி தனக்கும் தன் கணவருக்கும் பரோல் கேட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கணவரின் தந்தை இறந்து ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில் அவருக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் எனவும், தனது தாயார் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.