கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர். அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்தரிக்கபட்டுள்ளான். முருகனைக் குறித்துக் “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.