எம்.எல்.ஏக்களை அடுத்து எம்.பி: நாகை எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (16:57 IST)
நாகை எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பல விஐபிக்களும் குறிப்பாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இதுவரை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நாகை மக்களவைத் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராசு என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இதனை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராசு அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் எம்பி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது