ஊருக்கே சோறு போடும், விவசாயி தனக்கே சோறு இல்லாமல் உயிர் இழப்பது மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரையும் மனம் நொந்து கண் கலங்க செய்கிறது. நேற்று கீழையூர் விவசாயி ராஜ்குமார், இன்று விவசாயி மாரிமுத்து என்று விவசாயிகள் தற்கொலை நீண்ட கொண்டே போய்கிறது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் பலர் இன்று கடன்களில் தத்தெடுப்பதும், வேறு தொழிலை நாடி செல்லும் செய்தியாக தினந்தோறும் வெளிவருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் அழிவது மட்டுமின்றி விவசாயிகளும் அழிந்து வருவது நாளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணியை அடிக்கிறது என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.