தன்னுடைய புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதியில்தான் என கூறிய ஜெயலலிதா!!

புதன், 7 டிசம்பர் 2016 (15:44 IST)
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆன நிலையில், நேற்று முன் தினம் காலமானார். ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
 

 
 
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே சசிகலாவிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா' என்கிறார் அதிமுக சீனியர் ஒருவர்.
 
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நினைவிடம் அமைந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடற்கரையோரங்களில் தலைவர்களின் சமாதி அமைவதற்கு அனுமதியில்லை. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழையும் பெற்றாக வேண்டும். அப்போலோவில் நிலைமை கைமீறிப் போவதை அறிந்து, இறுதிக் காரியங்களுக்கான வேலைகளில் இறங்கினார் சசிகலா. ராஜாஜி ஹாலை சுற்றியுள்ள பகுதிகளை சீரமைக்கும் வேலைகள் தொடங்கின.
 
முதல்வர் பலமுறை தன்னுடைய பேச்சில் தன் குடும்பத்தில் அம்மா, அண்ணன் ஆகிய யாருமே 60 வயதைக் கடந்து இருந்ததில்லை. 60 வயதுக்கு மேல் வாழ்வது நான் மட்டும்தான்' என்பாராம். எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவரைச் சுற்றியிருந்தவர்கள் ஜெயலலிதாவை(அம்மாவை) ராணுவ வண்டியில் ஏறவிடாமல் கடுமையாகத் திட்டி கீழே தள்ளிவிட்டார்கள். அதுவே அவரது வாழ்நாளுக்குமான அவமானமாக கருதி, வைராக்கியமாக எடுத்துக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவராக விளங்கினார்.
 
தன்னுடைய உடல் எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் என்னுடைய உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும்' என்பதை சசிகலாவிடம் தெரிவித்திருந்தார். 'தன்னுடைய இறுதி நாட்கள் எப்படி இருக்க வேண்டும்' என அவர் எப்படி 
விருப்பப்பட்டாரோ, அதன்படியே செய்யப்பட்டன" என்றார் நெகிழ்ச்சியோடு கூறினார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்