அடுத்து நீங்கதான்.. லிஸ்டில் ஈபிஎஸ், ஓபிஎஸ்!?? – முத்தரசன் கருத்து!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (12:40 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் நிலையில் அடுத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் விசாரிக்கப்படலாம் என கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதை தொடர்ந்து அரசு நிர்வாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது கே.பி.அன்பழகன் வீடு மற்றும் சொந்தமான பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. இந்நிலையில் ரெய்டு சம்பவம் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடமும் விரைவில் விசாரணை நடைபெறலாம்” என தெரிவித்துள்ளார். இந்த ரெய்டு சம்பவம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்