தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது..! சிபிசிஐடி அதிரடி..!

Siva

திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:57 IST)
ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், கரூரில் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஏற்கனவே கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் சேகரின்  முன்ஜாமீன் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக  கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அபகரிக்க முயன்றதாக புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்த நிலையில் இதே வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளி வந்துவிட்டார். ஆனால் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனு கடந்த 3 நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரும் கைது செய்யப்பட்டார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்