முதல்முறையாக இன்டர்நெட் வசதி பெறும் மலைக்கிராமம்: மாணவர்கள் மகிழ்ச்சி!

செவ்வாய், 21 டிசம்பர் 2021 (11:39 IST)
முதல்முறையாக மலை கிராமம் ஒன்றுக்கு இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள காரையாறு என்ற பகுதியில் உள்ள பள்ளியில் தற்போது இன்டர்நெட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்த மலைகிராமத்தில் இன்டர்நெட் வசதி கிடைத்துள்ளதால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
இன்டர்நெட் வசதி இல்லாததால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தற்போது இன்டர்நெட் வசதியை தமிழக சபாநாயகர் அப்பாவும் மற்றும் அமைச்சர் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மாணவர்களின் கல்வி மற்றும் வசதிக்காக இன்டர்நெட் வசதி தொடங்கப்பட்டுள்ளது என்றும், படிப்படியாக மேலும் பல்வேறு வசதிகள் இந்த மலை கிராமத்திற்கு கிடைக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவும் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்