நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஃபனி புயல், காற்றில் உள்ள ஈரப்பதத்தை அடித்து கொண்டு சென்றுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அதிகபட்சமாக வேலூரில் 112 டிகிரி அளவுக்கு வெப்பம் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கன்னியாகுமரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் இந்த வெப்பத்தில் இருந்து தப்பித்துவிட்டன என்பதும் இந்த பகுதிகளில் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது