மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:04 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும் அப்பொழுது தான் குறைவான மின்சார கட்டணம் வரும் என்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் அந்த தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்
 
அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு செய்தால் மின்கட்டணம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்