ஆவின் பாக்கெட்டுக்களை கொடுத்தால் பணம் ! ஆவின் நிறுவனம் அறிவிப்பு

புதன், 31 ஜூலை 2019 (19:12 IST)
தமிழகத்தில் அரசு  ஆவின் பால் நிறுவனத்தை நிர்வகித்து வருவது. இத்துறையில் தனியார் நிறுவனத்திற்கு போட்டியாக ஆவின் நிறுவன் மக்களிடம் செல்வாக்குப் பெற்று திகழ்கிறது. ஆவின் ஜங்சன் மற்றும் பல்வேறு டீ ஸ்டால்களை அமைத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
நம் தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு துவக்கம் முதலே தமிழக அரசு மொத்தம் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மறுசுழற்சி செய்யும், பிளாஸ்டிக் வகைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் அரசால் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் மறுசுழற்சிக்கு உகந்தது ஆகும். எனவே மக்கள் ஆவின் பால் பாக்கெட்டுக்களை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
 
காலி பாக்கெட்டுக்களை சில்லறை வணிகர்கள் விற்பனை நிலையங்கள்,முகவர்கள், பால் முகவர்கள் , பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து ஒரு பாக்கெட் ரூ. 10 பைசா பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்