திமுக கூட்டணியில் இடம் கிடைக்காமல் ஏமாந்த கட்சி

புதன், 6 மார்ச் 2019 (07:59 IST)
திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூ 2, மார்க்கிஸ்ட் கம்யூ 2, விசிக 2, மதிமுக 1 (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1, கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு இந்த முறை தொகுதி ஒதுக்கவில்லை. வழக்கம்போல் இதயத்தில் மட்டும் இடமளிக்கிறோம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளதால் அக்கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திமுக தேர்தல் பணிக் குழுழுவினருடன், மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தியபோது அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும், அந்த ஒரு தொகுதியில்உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதனை மமக தலைவர்கள் ஏற்கவில்லை.
 
இந்நிலையில், இன்று இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு சென்ற மமக தலைவர்களிடம், தற்போது தொகுதி ஒதுக்க முடியாது, ஆதரவு மட்டும் கொடுங்கள் என்று திமுக தரப்பில் கூறியதும், மமகவினர் அதிர்ச்சி அடைந்தனர். திமுக கூட்டணியில் மமகவுக்கு தொகுதி ஒதுக்கப்படாததற்கு பல காரணங்கள் திமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று கடந்த முறை திமுக கூட்டணியில் கனிமொழியின் ஆதரவால் இடம்பெற்றது என்பதும் ஒன்று ஆகும். இந்த நிலையில் மமக, தினகரன் கூட்டணிக்கு செல்லவிருப்பதாக தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்