சீக்கிரம் சட்டசபையை முடிங்க, மேட்ச் பார்க்கணும்: ஒரு எம்.எல்.ஏவின் பொறுப்பற்ற செயல்

புதன், 3 ஜூலை 2019 (10:03 IST)
நேற்று அமைச்சர் அன்பழகன் கல்லூரிகளில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சட்டப்பேரவையில் விளக்கி கொண்டிருந்தபோது ஒரு எம்.எல்.ஏ தனது சக எம்.எல்.ஏவிடம் சீக்கிரம் சட்டசபை கூட்டத்தை முடித்தால் வீட்டுக்கு சென்று மேட்ச் பார்க்கலாம் என்று கூறியதாக ஒரு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
 
நேற்று நடந்த இந்தியா-வங்கதேசம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக சட்டசபையில் இருந்த எம்.எல்.ஏக்களும் ஆர்வம் காட்டினர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து எம்.எல்.ஏக்களும் மேட்ச் பார்ப்பதற்காக நேற்று வீட்டுக்கு செல்ல அவசரப்பட்டனர். ஒரு மூத்த எம்.எல்.ஏ சட்டசபையில் முக்கிய விவாதம் நடந்து கொண்டிருந்தபோது எழுந்து வெளியே சென்றார்.
 
அதனையடுத்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் தனக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏவிடம் 'இந்த விவாதம் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும், இந்தியா மேட்ச் பார்க்கணும் என்று சொல்லியிருக்கின்றாராம். அதுபோல் நேற்று பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டம் முடியும் முன்னரே எழுந்து சென்றுவிட்டனர்.
 
மக்களின் பிரச்சனைகளை பேசுவதற்காக மக்கள் இவர்களை எம்.எல்.ஏ ஆக்கினால், இவர்களுக்கு மக்கள் பிரச்சனையை விட மேட்ச் முக்கியமா? என்ற கேள்வி எழுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்