ஏன் இப்படி?? வோடபோன் ரீசார்ஜ் ப்ளான்; நொந்துபோன ஏர்டெல்!

செவ்வாய், 2 ஜூலை 2019 (16:11 IST)
ஏர்டெல் வழங்கி வரும் ரீசார்ஜ் திட்டத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. 
 
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.129 ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ரூ.129-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கபப்டுமாம்.
 
இதற்கு முன்னர் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. வோடபோனின் இந்த ரீசார்ஜ் திட்ட மாற்றம் ஏர்டெல் ரூ.129-க்கு போட்டியாக உள்ளது. 

ஆனால், வோடபோன் ஒரு படி மேலே சென்று டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் ஆகியவற்றோடு வோடபோன் பிளே செயலி மூலம் நேரலை டி.வி., திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்குகிறது. 
 
ஏர்டெல்லும், ரூ.129-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்களுக்கு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்