தாயகம் திரும்பிய மாணவர்கள் - நேரில் சென்று வரவேற்ற ஸ்டாலின்!

சனி, 12 மார்ச் 2022 (12:42 IST)
இன்று உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

 
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை அடுத்து அங்கு தவித்து வந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர். உக்ரைனில் தவித்து வந்த கடைசி தமிழக மாணவர்கள் குழுவும் பத்திரமாக நாடு திரும்பி உள்ளது. 
 
இந்நிலையில் இன்று உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மேலும் உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க உதவிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 
 
இதன் மூலம் ச்உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ மாணவிகள் மீட்கப்பட்டதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்