3 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

புதன், 19 மே 2021 (08:34 IST)
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தமிழக முதலமைச்சரை களத்தில் இறங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் தற்போது மூன்று மாவட்டங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சற்றுமுன் வெளியான தகவலின்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் அவர் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. தமிழக முதலமைச்சரை அடுத்து அமைச்சர்களும் பல மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்