தூக்கில் தொங்குவாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: மு.க.ஸ்டாலின் கேள்வி!

வியாழன், 29 ஜூன் 2017 (11:26 IST)
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகவும், அதனை நிரூபிக்க தவறினால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், இல்லையென்றால் தூக்கில் தொங்குவதாகவும் கூறினார்.


 
 
ஆனால் அமைச்சர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாலில் எந்த கலப்படமும் இல்லை என்றே பால் பரிசோதனைக்கு பின்னர் ரிப்போர்ட் வந்தது. இதனையடுத்து சொந்த கட்சிக்குள்ளேயே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பதவி விலக குரல் வந்தது.
 
இந்நிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் திமுக சார்பில் குளங்கள் தூர்வாரப்படுவதை பார்வையிடவந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், பாலில் கலப்படம் செய்யப்படுகிறது அதை நான் நிரூபிக்கவில்லை என்றால் நான் பதவியை ராஜினாமா செய்வேன், தூக்கில் தொங்குவேன், தற்கொலை செய்து கொள்வேன் என்றேல்லாம் சொன்னார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
 
தற்போது வரக்கூடிய செய்திகளை பார்த்தால், அவர் ராஜினாமா செய்யப்போகிறாரா? அல்ல அவர் சொன்னபடி தூக்கில் தொங்க போகிறாரா? தற்கொலை செய்து கொள்ள போகிறாரா? என மக்கள் கேட்கிறார்கள் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்