அன்னைக்கு தரல.. இன்னைக்கு தாராளம்! பொங்கல் பணமா? எலெக்‌ஷன் பணமா? – ஸ்டாலின் சந்தேகம்!

ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (08:45 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பொங்கலுக்கு அதிகமான பணம் தருவது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் ஜனவரியில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கள் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பாக நியாய விலை கடைகள் மூலமாக பொங்கல் பொருட்கள், கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் வரும் பொங்கலுக்கு பொங்கல் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் “அன்று பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க சொல்லி திமுக வலியுறுத்தியபோது கண்டுகொள்ளாத முதல்வர் இன்று பொங்கல் தொகுப்பிற்கு ரூ.2500 வழங்குவது தேர்தல் நெருங்கிவிட்டதால் தனது சுயநலத்திற்காக இதை செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடுக்கட்டும் பரவாயில்லை. ஆனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகையாக இப்போதாவது வழங்குங்கள்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்