இந்தநிலையில் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிவிப்பில் சட்டமன்ற உறுப்பினராக பேரவைக்குள் நுழைந்திருக்க வேண்டியவர் மாதவராவ் என்றும் அவருடைய மறைவு பேரிழப்பு என்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்